Sunday, December 25, 2011

சிவபுராணம்.2

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. ஓரு நொடியுமென் மனதில் நீங்காது இருக்கின்ற ஈசனது திருவடி வாழ்க.இறைவனுடைய பெருமையை உணருகின்றவையில் ஆத்ம சாதனம் துவங்குவதில்லை. பல பிறவிகளில் மனிதன் தெய்வத்தை வெளியில் தேடி அலைந்தான்.இறைவன் இருக்கின்ற இடமாகிய பரம பத்ம்,கைலாயம்,வைகுண்டம் என்றெல்லாம் தேடி அலைந்தான்.அல்லல் பல பட்ட பின் தான் தேடும் பரம்பொருள் தன்னிடத்தே இருக்கின்றான் என்பதை அறிகிறான்.அதன் பின்பே அனுடைய ஆதம சாதனம் விரைந்து மேலோங்குகிறது.

No comments:

Post a Comment