Friday, December 30, 2011
சிவபுராணம்-4,5,6
4.ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க. ஆகமப்பொருளாகி நின்று அகத்தே தித்திப்பவனது திருவடி வாழ்க.எது அகத்தில் இருக்கிற்தோ,அதுவே புறத்திலும் இருக்கிறது என்பதை உணருபவனே ஞானிக்கு ஒப்பாவான். 5.ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க. ஒன்றாக இருப்பவனும் பலப்பலவாகி இருப்பவனுமாகிய இறைவனின் திருவடி வாழ்க. 5.வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க.மனோவேகத்தை கட்டுப்படுத்தி என்னை ஆட்கொண்ட இறைவனே உனது திருவடிகள்வாழ்க.
Monday, December 26, 2011
சிவபுராணம்-3
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க. மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் கோகழி என்றுகூறப்ப்டும் திருவாடுதுறை அது திருப்பெருந் துறைஎன்றும்வழங்கப்ப்டுகிறது. இத்தலத்திலே எழுந்தருளி அடியேனை ஆட் கொண்ட இறைவனே உங்கள் திருவடி வாழ்க்.
Sunday, December 25, 2011
சிவபுராணம்.2
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. ஓரு நொடியுமென் மனதில் நீங்காது இருக்கின்ற ஈசனது திருவடி வாழ்க.இறைவனுடைய பெருமையை உணருகின்றவையில் ஆத்ம சாதனம் துவங்குவதில்லை. பல பிறவிகளில் மனிதன் தெய்வத்தை வெளியில் தேடி அலைந்தான்.இறைவன் இருக்கின்ற இடமாகிய பரம பத்ம்,கைலாயம்,வைகுண்டம் என்றெல்லாம் தேடி அலைந்தான்.அல்லல் பல பட்ட பின் தான் தேடும் பரம்பொருள் தன்னிடத்தே இருக்கின்றான் என்பதை அறிகிறான்.அதன் பின்பே அனுடைய ஆதம சாதனம் விரைந்து மேலோங்குகிறது.
சிவபுராணம்
நமச்சிவாயவாழ்க நாதன் தாள்வாழ்க, இறைவன் உலகத்தில் எங்குமெதிலும் நீக்க மற நிறைந்து இருப்பவன் உயிரோடு இணைந்த உடலுக்கு நடுநாயகமாய் இருப்ப்து இதயம்.நாம் வாழமுக்கியமானது. மூளை வேலை செய்யாவிட்டாலும் வாழ்க்கை நடக்கும்.இதயம் வேலைசெய்யாவிட்டால்மரணம் நேரும்.உடல்வாழ்க்கைவாழ இதயம் எவ்வளவு முக்கியமோ,பாரமார்த்திக வாழ்வுக்கு பஞ்சாட்சர மந்திரம் மிக முக்கியமானது. ஓம் நமசிவாய.
Subscribe to:
Posts (Atom)