Monday, August 31, 2009

வானம்

கவலைதோய்ந்த கருத்தமுகத்துடன்
பொட்டில்லா வானம்
சீண்டிப்பார்த்தால் சிந்திவிடும்
கண்ணீர் துளிகள் பளிச்சிடும் கண்களில்
பட்டுத் தெறிக்கும் பார்வை முத்துக்கள்
மண்ணில் விழ மண்ணில் நடக்குமோர்
மகரந்தச்சேர்க்கை வானம் தந்தகானம்
இருட்டு மேகத்தின் கண்ணீர் துளிகள்
மின்னல் தந்ததாக்குதலில்பெருத்தகண்ணீர்
வானமுரசின் வரவால் காணாமல்போகும்
கண்ணீர் துளிகள் ., நெற்றிப் பொட்டை
மறைத்து கருப்புப் போர்வை போர்த்திய
வானப் பெண் பூமிக்கு தந்த வெகுமதி

No comments:

Post a Comment