Saturday, December 13, 2008

ஆசை

கறுத்த இரவுகள் பல காலம்

வெளுத்த பகல்கள் பல காலம்

நரை மூடிய பின்னும்

முதுகுகள் கோணலாய்

கேள்விக்குறி ஆனபின்னும்

பார்வைகள் வெளுத்து

கருமையை காட்டிய பின்னும்

மூன்றாவது காலோடும்

நண்டும் சிண்டுமாய்

பேரன் பேத்திகள் ஆனபின்னும்

நரை படியா ஆசைகளால்

கறை படியும் உள்ளங்கள்.

6 comments:

பழமைபேசி said...

//நரை படியா ஆசைகளால்
கறை படியும் உள்ளங்கள்.//

பெருசுக சில்மிசம் தாங்க முடியலைங்ளா? வரிகள் நல்லா இருக்கு!!

Anonymous said...

good one, keep your writing..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பேரன் பேத்திகள் ஆனபின்னும்

நரை படியா ஆசைகளால்//



??????

Vishnu... said...

கவிதை அருமை ...

ஆசைக்கு வயதில்லை ...நல்ல ஆசை என்றால் தவறில்லை .....

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு

Anonymous said...

நல்லா இருக்குங்க. "ஐம்பதிலும் ஆசை வரும்" ன்னு எப்பவோ சொல்லிருக்காங்க.

இங்கு ஆசை என்பதில் பணம், பதவி, பெருமை, புகழ், பெண், பொன், என பாகுபாடின்றி அனைத்துவித ஆசையும் அடக்கமாம்.

அமிர்தலிங்கம் said...

நன்றி பழமைபேசி - மனித ஆசைகள் வெளிப்பாடே தவிர சில்மிசம் அல்ல. :-)

நன்றி SUREஷ் - வயதான பின்னும் ஆசைவிடவில்லை என்பதே.

நன்றி Vishnu உங்களின் வருகைக்கும், மறுமொழிக்கும்.

Post a Comment