மதியை இழந்து மனதைக் கெடுக்கும்
மமதை கொடுக்கும் அன்பை அழிக்கும்
வம்பை வளர்க்கும் உறவைத் தொலைக்கும்
நன்மை விலகும் தீமை அணைக்கும்!
-இப்படிக்கு
அமுதி
கோபம் பாரதியின் பார்வையில்
கோபத்தால் நாடிஅதிர்ச்சி உண்டாகும்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாம்
அச்சத்தால் நாடிஎல்லாம் அவிந்து போகும்
கவலையினால் நாடி எல்லாம் கனலாய்போகும்
கோபத்தை வென்றிடவே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே!
-மகாகவி பாரதி ( பிறப்பு - டிசம்பர் 11, 1882 - மறைவு - செப்டம்பர் 11, 1921)
Thursday, December 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment