மழையால் சாலைகள்
உடைந்து போக,
மரங்கள் எல்லாம்
வீழ்ந்து போக,
ஆற்று வெள்ளம்
வீடுகளை அரவணைக்க,
அரசு பார்த்து
ஆற்றுப் படுத்தி,
ஆயிரம் ரூபாய் தாள்கள் இரண்டு
கஜானாவிலிருந்து கொடுக்க,
குடிமகன்கள் கஜானாவின்
காலியாகும் நிலைபார்த்து
அரசு கஜானாவை நிரப்ப
வெள்ளமெனத் திரண்டனர்
ஆயிரம் ரூபாய்த் தாளோடு
சாராயக்கடை நோக்கி !
Wednesday, December 31, 2008
Saturday, December 13, 2008
ஆசை
கறுத்த இரவுகள் பல காலம்
வெளுத்த பகல்கள் பல காலம்
நரை மூடிய பின்னும்
முதுகுகள் கோணலாய்
கேள்விக்குறி ஆனபின்னும்
பார்வைகள் வெளுத்து
கருமையை காட்டிய பின்னும்
மூன்றாவது காலோடும்
நண்டும் சிண்டுமாய்
பேரன் பேத்திகள் ஆனபின்னும்
நரை படியா ஆசைகளால்
கறை படியும் உள்ளங்கள்.
Thursday, December 11, 2008
யு(பு)த்த பூமி!
சிங்க[ள] தமிழன் சிந்திய ரத்தங்கள்
விடுதலை வேட்கையின் முத்தங்கள்!
தமிழ் தலை நிமிர
சிங்க[ள்] தமிழன் தலை நிமிரவேண்டும்!
புத்தம் போதித்த பூமியில்
ரத்த ஆறுகள்
அகிம்சை வள்ர்த்த பூமியில்
மீண்டும அரக்கர்கள்
அழிவில்லா சமுதாயத்தின் மீது
ஆற்றல் மிகு யுத்தங்கள்
அசோகன் ஆயுதம் விடுத்து
ச[யு]த்தமிலா உலகு படைக்க
யுத்தம் விடுத்தான்.
சிங்களச் சிப்பாயின்
இன வெறித் தாக்குதல்கள்
இதயத்தை இரும்பாக்கி
மனித குல மீறல்களோடு குண்டுவீச்சுகள்
உலக சமுதாயம் உணர்வில்லா பார்வையோடு!
உற்வுகள் தொலைந்து
உரிமைகள் தொலைந்து
உடைமைகள் தொலைந்து
உணவும் தொலைந்து
ஓட்டிய வயிறும் தலை காய்ந்த குழலும்
படிக்க வேண்டிய வயதில்
பயத்தோடு பதுங்குகுழியில்
இடம்தேடி ஓடிஒளியும் மழலைகள்;
இதயம்துடிக்க இதயமில்லா
இலங்கை வெறியர்கள்.
உலகச் சமுதாயப் பார்வை திரும்ப
உலகத் தமிழா,
உணர்வோடு உரக்கக் குரல் கொடு
உன் சமுதாயம் தழைக்க!
விடுதலை வேட்கையின் முத்தங்கள்!
தமிழ் தலை நிமிர
சிங்க[ள்] தமிழன் தலை நிமிரவேண்டும்!
புத்தம் போதித்த பூமியில்
ரத்த ஆறுகள்
அகிம்சை வள்ர்த்த பூமியில்
மீண்டும அரக்கர்கள்
அழிவில்லா சமுதாயத்தின் மீது
ஆற்றல் மிகு யுத்தங்கள்
அசோகன் ஆயுதம் விடுத்து
ச[யு]த்தமிலா உலகு படைக்க
யுத்தம் விடுத்தான்.
சிங்களச் சிப்பாயின்
இன வெறித் தாக்குதல்கள்
இதயத்தை இரும்பாக்கி
மனித குல மீறல்களோடு குண்டுவீச்சுகள்
உலக சமுதாயம் உணர்வில்லா பார்வையோடு!
உற்வுகள் தொலைந்து
உரிமைகள் தொலைந்து
உடைமைகள் தொலைந்து
உணவும் தொலைந்து
ஓட்டிய வயிறும் தலை காய்ந்த குழலும்
படிக்க வேண்டிய வயதில்
பயத்தோடு பதுங்குகுழியில்
இடம்தேடி ஓடிஒளியும் மழலைகள்;
இதயம்துடிக்க இதயமில்லா
இலங்கை வெறியர்கள்.
உலகச் சமுதாயப் பார்வை திரும்ப
உலகத் தமிழா,
உணர்வோடு உரக்கக் குரல் கொடு
உன் சமுதாயம் தழைக்க!
கோபம்
மதியை இழந்து மனதைக் கெடுக்கும்
மமதை கொடுக்கும் அன்பை அழிக்கும்
வம்பை வளர்க்கும் உறவைத் தொலைக்கும்
நன்மை விலகும் தீமை அணைக்கும்!
-இப்படிக்கு
அமுதி
கோபம் பாரதியின் பார்வையில்
கோபத்தால் நாடிஅதிர்ச்சி உண்டாகும்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாம்
அச்சத்தால் நாடிஎல்லாம் அவிந்து போகும்
கவலையினால் நாடி எல்லாம் கனலாய்போகும்
கோபத்தை வென்றிடவே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே!
-மகாகவி பாரதி ( பிறப்பு - டிசம்பர் 11, 1882 - மறைவு - செப்டம்பர் 11, 1921)
மமதை கொடுக்கும் அன்பை அழிக்கும்
வம்பை வளர்க்கும் உறவைத் தொலைக்கும்
நன்மை விலகும் தீமை அணைக்கும்!
-இப்படிக்கு
அமுதி
கோபம் பாரதியின் பார்வையில்
கோபத்தால் நாடிஅதிர்ச்சி உண்டாகும்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாம்
அச்சத்தால் நாடிஎல்லாம் அவிந்து போகும்
கவலையினால் நாடி எல்லாம் கனலாய்போகும்
கோபத்தை வென்றிடவே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே!
-மகாகவி பாரதி ( பிறப்பு - டிசம்பர் 11, 1882 - மறைவு - செப்டம்பர் 11, 1921)
Tuesday, December 9, 2008
வணக்கம் நண்பர்களே!
வணக்கம் நண்பர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
தமிழில் வலைப்பதிவு எழுதும் எனது முதல் முயற்சி .
அன்புடன்,
அமுதி.
Subscribe to:
Posts (Atom)