சிங்களச்சண்டையில் குளிர்காயும் அறிக்கைகள், ஆள் மாற்றி மாற்றி அறிக்கை யுத்தங்கள்,தினசரிகள் வாயிலாக வரத் தொடங்கிவிட்டது. ராஜினாமா நாடகங்கள் அரங்கேற்றப் போகிறது. வரப்போகும் தேர்தலுக்கு வாக்காளர்களை ஏமாற்ற அரசியல் காய்களை நகர்த்த தலைநகரில் தயாராகிவிட்டனர். சிங்களத் தமிழன் நிலை பரிதாபமோ இல்லையோ, தாய்த் தமிழன் நிலையும் பரிதாபம ஆகப்போகிறது. வியாபாரச் சந்தையில் விரிக்கத் தொடங்கிய தமிழ் சாம்ராஜ்ஜியம் சரிவை கண்டபின் நீலிக்கண்ணீரும் கட்டுரைகளும்,கவிதைகளும் அறிக்கைகளும் வசனங்களும் வாரிவழங்கப் போகிறார்கள். பசித்தவனுக்கு பாலைக் கொடுக்காமல் பாலைத் தயிராக்கி, தயிரை மோராக்கி, மோரை வெண்ணையாக்கி, அந்த வெண்ணையை நெய்யாக்கி நெய்யையும் வியாபாரமாக்கி விற்று அதன் வாசனையை மட்டும் பசிக்குக் கொடுக்கப் போகும் அறிக்கைகள், நாடகங்கள் இனி வரும்.
முல்லைத்தீவும் கைவசம் என சிங்களச் சிப்பாய்கள் அறிவிப்பு - அரசியல்வாதிகளின் அடுத்த முகங்கள் நாளைய ஏட்டில் பிரதிபலிக்கும். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்கு போல் ஓட்டுக்காக மக்களை குழப்பப்போகும் அரசியல்வாதிகள்;
தமிழனை ஏலமிடப்போகும் அரசியல்வாதிகளுக்கு நாமும் குடியரசு வாழ்த்து சொல்லுவோம்...
1 comment:
சோதனை மறுமொழி!
Post a Comment